Posts

Showing posts from December, 2024

மழை காலங்களில் மாடுகளுக்கான தீவன மற்றும் பொது மேலாண்மை முறைகள்-Part 2

Image
5.கலப்பு தீவன மேலாண்மை •        குறைவான காலத்திற்கு தேவையான தீவனத்தை மட்டும்   வாங்கவும் •        கலப்பு   தீவனத்தை மழை காலங்களில் நீண்ட நாட்கள் சேமிக்க கூடாது •        கலப்பு   தீவனத்தில் ஈரப்பதம் 50% மேல் இருந்தால் சோதித்துப்பார்த்து வாங்கவேண்டும் .தீவனம் கெட்டிப்பட்டிருந்தால் அதில் ஈரப்பதம் அதிகம் என்று பொருள் உள்ளங்கையில்   வைத்து அழுத்தி பார்க்கவும் •        கலப்பு   தீவனத்தை சற்று தூரத்தில் வைத்து முகர்ந்து பார்க்கவும் மக்கிய வாசம் இருந்தால் வண்டுகள் நிறைந்திருக்கும் •        மழை காலங்களில் தீவன மூட்டைகளை சுவர் ஓரமாக வைக்க வேண்டாம் •        தீவன மூட்டைகளுக்கு இடையில் இடைவெளி இடவும் •        ஒரு வாரத்துக்கு தேவையான தீவனத்தை மட்டும் வாங்கவும் •        ஈரமில்லாத நன்கு உலர்ந்த அறையில் தீவனத்தை சேமியுங்கள் 6...

மழை காலங்களில் மாடுகளுக்கான தீவன மற்றும் பொது மேலாண்மை முறைகள்

Image
  தொடர் மழை காலங்களில் புற்களில் ஏற்படும் மாறுபாடுகள்:   புல்லில் உள்ள சர்க்கரை சத்து கொழுப்பு சத்து   மற்றும் தாது சத்துக்கள் மழை நீரில் கரைந்து வெளியேறும்   மிதமான தொடர் மழையால் அதிக அளவிலும், கன மழையால்   சற்றே குறைந்த அளவிலும் நீரில் கரையும் ஊட்டசத்துக்கள் புற்களில் இருந்து வெளியேறும் .அதனால் புல்லில் உள்ள தண்ணீர் நீங்கலாக பிற சத்துக்கள் அடங்கிய உலர் பொருளின் அளவு   குறையும் சுமார் 1.0 -2.50 அங்குலத்துக்கு மேல் மழை பெய்தால்   பசும் தீவனங்களின் இலைகள் உதிர ஆரம்பிக்கும் .இலைகள் உதிராத   நிலையில் தான் பசும் தீவனங்களின் புரத சத்து அதிகரிக்கும் பொதுவாக மழை காலங்களில் புற்கள் வேகமாக வளர்ந்து மிக விரைவில் முற்றிவிடுவதால் அதில் நார் சத்து முற்றி செரிமானம்   பாதிக்கப்படும் மழையால் நீரில் கரையும் மாவு சத்துக்கள் வெளியேறுவதால் நார் சத்து அதிகரித்து எரிச்சத்தும் குறையும்.    புற்களின் செரிமானம் சுமார் 6.0 -40.0 சதம் வரை குறையும் புற்களில் மாவு சத்து குறைவதால் மாடுகளின் முதல் வயிற்றில் நுண்ணுயிரிகளால் செரிக்கப்படும் தன்மை குறையும் புற்களி...