சினை பிடிக்காத மாடுகளுக்கு முருங்கை இலையுடன் கூடிய மருத்துவ முறை
முருங்கை இலை தீவனம் அளிப்பதால் இனப்பெருக்க த் திறன் அதிகரிக்கும் ◆ கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கு முருங்கை இலைகளை தீவனத்தில் சேர்ப்பதால் ஈன்றபின் கர்ப்பப்பை இயல்பான நிலைக்கு திரும்ப ஆகும் நாட்கள் குறையும். ◆ முருங்கை இலை தீவனம் அளிப்பதால் மாடுகளில் கருமுட்டை பைகளில் கட்டிபிரச்சினை மற்றும் கர்ப்பப்பையில் நோய் தாக்கம் குறைவதுடன் கன்று ஈன்ற பின் கர்ப்பப்பையின் நுழைவாயில் விரைந்து மூடிக்கொள்வதற்கும் உதவுகின்றது. ◆செம்மறி ஆடுகளில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் முருங்கை இலை தீவனமாக அளிக்கப்பட்டதால் ஆடுகளிலில் உற்பத்தி ஆகும் கருமுட்டை சற்று வேகமாக முதிர்ச்சி அடைந்து விந்துடன் இணைய தயார் நிலையை அடைகின்றது என தெரிய வந்தது. ◆ ஒரு ஆய்வில் முருங்கை இலைகளை முயல்களுக்கு அளித்த பொழுது அவைகளுக்கு பிறந்த குட்டிகளின் எண்ணிக்கை, சினையான தாய் முயல்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சினை பிடிக்காத மாடுகளுக்கு முருங்கை இலையுடன் கூடிய மருத்துவ முறை முள்ளங்கி மற்றும் சோற்று கத்தாழை கொடுக்கும் பொழுது அவற்றின் மேல் வெல்லம் மற்றும் சமையல் உப்பு தடவி வாய் வழியே கொடுக்க வேண்டும். முருங்கை இலை பிரண்டை மற்றும...