Posts

Showing posts from April, 2023

மாடுகளில் பால் மடி வீக்கத்தை தவிர்த்து இலாபத்தை அதிகரியுங்கள்

Image
  மாடுகளில் பால் மடி வீக்கத்தை தவிர்த்து இலாபத்தை அதிகரியுங்கள் முனைவர் மு முருகன் P P h.D.,   பேராசிரியர் ( ஓய்வு ) தமிழ் நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகம் சென்னை கன்று ஈன்ற சில மாடுகளில் பால் மடி வீக்கமடைந்து அவ்வீக்கம் மாடுகளின் வயிறு வரை பரவிஇருக்கும் . மாடுகளின் பால் மடி திசுக்களில் திரவங்கள் நிரம்பி இருப்பதே இதற்கு காரணம் . மடியின் மேல் கைபட்டாலே மாடுகளுக்கு வலி உண்டாகும் . இதனால் பால் உற்பத்தி குறைவதுடன் மடி நோய் மற்றும் மடி காம்புகளில் காயம் போன்றவை ஏற்படும் . மடிவீக்கம் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் இதுவரை புலப்படவில்லை . மடிவீக்கம் . ஏற்படும் சமயம் மடியின் தமனியில் உள்ள தூய இரத்தத்தின் அளவு குறைவாகவும் சிரையில் உள்ள   அசுத்த   இரத்தத்தின் அளவு அதிகமாகவும் இருக்கும் . இந்த நிலையை சரியான தீவன மேலாண்மை மூலம் தவிர்க்கலாம். மடிவீக்கம் ஏற்பட காரணங்களையும் அதை தவிர்க்க மேற்கொள்ளவேண்டிய மேலாண்மை முறைகளும் : 1. முதல் கன்று ஈனும் வயது அதிகமாக இருப்பது :     ...