Posts

Showing posts from February, 2023

பால் பண்ணை தொழிலில் இலாபம் ஈட்ட பூஞ்சைகள் அற்ற தீவனம் அளியுங்கள்

Image
பூஞ்சைகளால் தாக்கப்படாத தீவனங்களை கறவை மாடுகளுக்கு அளியுங்கள். அதன் மூலம் பூஞ்சைகள் அற்ற தூமையான, தரமான பாலை உங்கள் மாடுகள் உற்பத்தி செய்வதை உறுதிப்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் பாலுக்கு மக்களிடையே தேவை அதிகரிக்கும் அதன் மூலம் உங்களின் இலாபமும் அதிகரிக்கும். தனியங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்ற வேளாண் பயிர்கள் மழை இன்றி வாடும் பொழுது அவை உற்பத்தி செய்யும் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றின் மேற்பரப்பில் விரிசல் ஏற்படும்.  இந்த விரிசலின் மூலம் சுற்றுச் சூழலில் பரவி கிடைக்கும் பூஞ்சைகள் உட்புகுந்து பல்கிப்பெருகும். அந்த விளைப் பொருட்களில் இருந்து கிடைக்கும் வேளாண் கழிவுகள்/ உபபொருட்ககளான உடைந்த தானியங்கள், தவிடு, பிண்ணாக்கு போன்ற தீவனப்பொருட்களை கால்நடைகள் உட்கொள்ளும்பொழுது அவை கால்நடைகளில் பூஞ்சை நஞ்சை உற்பத்தி செய்து சிக்கல்களை உண்டாக்குகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) அறிக்கையின்படி உலகில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தானியங்களில் சுமார் 25% பூஞ்சைகளால் பாதிப்படைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட தட்ப வெப...