கறவை மாடுகளின் மடி ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பால் பண்ணையை இலாபமாக்குங்கள்
பால் பண்ணை தொழிலில் இலாபம் ஈட்ட பால் மடியை பேணிக்காத்து மடி நோயை தவிருங்கள் கறவை மாடுகளில் மடி நோய் என்பது மாடுகளின் பால் மடியை தாக்கும் நோயாகும். இதனால் மாடுகளின் பால்சுரப்பு குறைந்து விவசாயிகள் நட்டமடைவார்கள். இந்த மடி நோய் என்பது இரு வகைகளில் மாடுகளின் ஏற்படுகின்றது. முதல் வகையில் இது நோய் அறிகுறிகளுடன் காணப்படும் ( Clinical Mastitis ). இரண்டாம் வகையில் அறிகுறிகள் இல்லாமல் காணப்படும் ( Sub- clinical Mastitis ). இந்த முதல் வகை மாடுகளின் அதிக பட்ச பால் கொடுக்கும் காலங்களில் அதாவது பெரும்பாலும் கன்று ஈன்ற முதல் 3 மாத காலங்களில் ஏற்படுகின்றது . இந்த காலகட்டத்தில் மாடுகள் மிக அதிகப்படியான அழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த அழற்சி மாடுகளின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைகின்ற காரணத்தால் மாடுகளின் மடி காம்பு வழியே உட்செல்லும் நோய் கிருமிகள் மிக விரைவாக நோயை உண்டாக்கும். மடிகாம்பிலிருந்து பால் வெளிவரும் துளையானது பால் கறக்கப்பட்ட 15-20 நிமிடங்களில் மிக இறுக்கமாக மூடிக்கொள்வதால் ந...